புலமைப்பரிசில் பரீட்சைப் புள்ளிவழங்கலில் மாற்றம்!

புலமைப்பரிசில் பரீட்சைப் புள்ளிவழங்கலில் மாற்றம்!

Editor 1

புலமைப்பரிசில் பரீட்சைக்கு புள்ளி வழங்கும் போது தரம் 04, 05 வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற புள்ளிகளும் சேர்க்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

புத்தளம் – சிலாபம் – தம்மிஸ்ஸர மகா வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 70 புள்ளிகள் வழங்கப்படும். மீதி 30 புள்ளிகள் தரம் 4, 5இல் அந்த மாணவர்கள் பெற்ற புள்ளிகளை அடிப்படையாக வைத்து வழங்கப்படும். இதனை முறையாக மதிப்பீடு செய்வது ஆசிரியர்களின் பொறுப்பு. பாடசாலை சபை மூலம் இந்த புள்ளி வழங்கல் கண்காணிக்கப்படும்.

புதிய கல்வி மறுசீரமைப்பின்போது தரம் 1, 6, 10 ஆகிய வகுப்புகளை உள்ளடக்கிய கல்வி முன்னோடி திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share This Article