இன்று 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யத் தீர்மானித்துள்ளது.
இந்த திருத்தங்களின் கீழ், மூன்று வகையான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இரண்டின் விலைகளில் மாற்றமில்லை.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோலின் விலை மாற்றமின்றி 420 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தும் அதன் விலை 377 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 202 ரூபாவாகும்.