இலங்கை முதலீட்டுச் சபை 100 கோடி அமெரிக்க டொலர் முதலீட்டு இலக்கை காலாண்டிலேயே எட்டியது!

இலங்கை முதலீட்டுச் சபை 100 கோடி அமெரிக்க டொலர் முதலீட்டு இலக்கை காலாண்டிலேயே எட்டியது!

Editor 1

இலங்கை முதலீட்டுச் சபையானது 2024ஆம் ஆண்டுக்கான 100 கோடி அமெரிக்க டொலர் முதலீட்டு இலக்கை முதல் காலாண்டிலேயே எட்டியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டு சபையுடன் முதலீட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ள முதலீட்டாளர்களுடன் தமது வர்த்தகத்தை தொடர்வதற்காக நடத்தப்பட்ட கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், அதானி நிறுவனம் ஏற்கனவே முதலீட்டு சபையுடன் 82 கோடி டொலர் முதலீட்டுக்கும் ஏனைய வர்த்தக நிறுவனங்களுக்கு மேலும் 32 கோடி டொலர்களுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளன எனவும் கூறினார்.

Share This Article