வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி நாட்டில் காலநிலையின் தாக்கம் காரணமாக கடும் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் அத்துடன் நாட்டில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடுமென்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.