பொது அமைதியின்மையை தூண்டும் வகையில் அரசியல், மத மற்றும் கலாசார அம்சங்களின்
மீது தாக்குதல் நடத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
ரமழான், தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் விரைவாக மாற்றமடையலாம். ஈஸ்டர் தாக்குதல் போன்று இல்லாவிட்டாலும் ஏனைய சம்பவங்கள் நிக ழலாம். இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்.
அமைச்சர்களின் பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாதத் தாக்குதல்களின் உலகளாவிய அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டிய அவர், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அத்துடன், உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அடிக்கடி எதிர்பாராத விதமாக நிகழ்கின்றன. இது விழிப்புணர்வின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நாட்டில் பொது அமைதியின்மையைத் தூண்டும்வகையில் அரசியல், மத மற்றும் கலாசார அம்சங்களின் மீது தாக் குதல் நடத்த சிலர் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.