மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் எண்மரை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை!

மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் எண்மரை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை!

editor 2

மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்கென ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் தற்போது 48 இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என தூதுவர் மேலும் தெரிவித்தார்.

சைபர் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்கென ஆட்கடத்தல் கும்பலால் இலங்கையர்கள் கடத்தப்படுள்ளனர். 

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைபெற்றுத் தருவதாகக் கூறியே இவ்வாறு இலங்கையர்கள் கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article