இலங்கையின் சுகாதாரச் சேவையை இலவசமாகப் பெற்றுக்கொண்டாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிலைமை மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், போலி மருந்துகளைக் கொள்வனவு செய்வதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தற்போது இலங்கையிலுள்ள வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு விரும்புவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
புற்று நோய் வைத்தியசாலையான மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் , இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் சில மருந்துகளைத் தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்யுமாறு வைத்தியர்கள் கூறுகின்றனர் .
மாதாந்தம் சுமார் ஒரு இலட்சம் ரூபாவை நோயாளிகள் மருந்துகளுக்காகச் செலவிட வேண்டியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.