இலங்கையில் இராணுவத் தளங்களை உருவாக்குவதற்கு சீனா திட்டமிடுகின்றது என அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவுகள் வெளியிட்டுள்ள தகவலை இலங்கை நிராகரித்துள்ளது.
இலங்கையின் எல்லைக்குள் தளங்களை அமைப்பது தொடர் பில் சீனா உட்பட எந்த நாட்டுடனும் பேச்சு இடம்பெறவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகளின் தகவல் தவறானது. இதனை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை தனது எல்லைக்குள் எந்த சூழ்நிலையிலும் எந்தநாடும் தளங்களை அமைப்பதற்கு அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை உட்பட பலநாடுகளில் இராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றது என அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் தமது சமீபத்தைய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.