நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை – கெஹலிய அறிவிப்பு!

நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை - கெஹலிய அறிவிப்பு!

editor 2

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். 

மேலும், சுகவீனம் காரணமாக அவர் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்று குறித்த கடிதததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரைப் பாராளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 

இதனிடையே, அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article