ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துஸ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் முன்னணி அரசியலமைப்பில் ஏற்கனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.