யாழ்ப்பாணம் சாவகச்சேரி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது பேருந்து மோதியதால் விபத்து நிகழ்ந்ததாகவும் அவரை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பரணிதரன்(வயது18) என்ற க.பொ.த உயர்தர வகுப்பு மாணவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.