சுகாதார தொழிற்சங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்கிறது!

சுகாதார தொழிற்சங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்கிறது!

editor 2

இலங்கை முழுமையிலும் 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு ஏற்படாததை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி சுகாதார தொழிற்சங்கத்தினர் நேற்றைய தினம் முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில், இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலைளுக்கு நேற்று சென்ற நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், அனைத்து சிறுவர், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளின் சேவைகள் வழமைப்போல் இடம்பெறும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Share This Article