களுத்துறை சிறையில் மற்றொரு கைதி மரணம்!

editor 2

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை சுகயீனமுற்றிருந்த குறித்த நபர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  மீண்டும் சிறைச்சாலைக்கு  அழைத்து வரப்பட்ட நிலையில்  சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக  சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மீண்டும்  அவர் நாகொடை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.

இவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த குற்றத்திற்காக சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார்  என  சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நிமோனியா காய்ச்சலால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article