இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற இலங்கையிலிருந்து 211 பேரைக்கொண்ட மற்றுமொரு குழுவினர் பயணமாகியுள்ளனர்.
IZ 640 என்ற விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலுக்கு பயணமானார்கள்.
இஸ்ரேலுக்கு செல்லும் இவர்களை தெளிவுபடுத்துவதற்காக விசேட நிகழ்ச்சியொன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
Zoom தொழில்நுட்பம் மூலம் இதில் கலந்துகொண்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இஸ்ரேல் செல்லும் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.