வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் திருடச் சென்ற ஒருவரை பாம்பு தீண்டியமை தொடர்பில் வெளியான தகவல் மற்றொரு சம்பவத்துடன் தொடர்புபட்டது என்று முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் CCTV கமெராவின் Hard Disk பொருத்தப்பட்டிருந்த பெட்டி ஒன்றை நபர் ஒருவர் திறக்க முற்பட்டபோது அதில் இருந்த பாம்பு தீண்டியுள்ளது.
இதனை அடுத்து அவரும் அவருடன் கூடச் சென்ற இருவரும் கூச்சலிட்ட நிலையில் ஆலயத்திலிருந்த முகாமையாளர் கிராமத்திலிருந்த இளைஞர்களை தொலைபேசி ஊடாக அழைத்து விடயத்தை தெரிவித்திருக்கின்றார்.
அதன் பின்னர் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்.
சம்பவம் உண்மையில் திருட்டுக்காக நடைபெற்றதா? என்று விசாரித்தபோது,
சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் செல்வந்தர் என்றும் மற்றொருவர் அண்மையில் ஆலய நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிப்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த CCTV சேமிப்பு காட்சிகளை அகற்றுவது தொடர்பில் நிர்வாகத்தில் அங்கம் பெற்றுள்ள ஏனையவர்களுக்கு தெரிவிக்காமலேயே இருள் வேளையில் அதனை அகற்றுவதற்கு முயற்சி நடைபெற்றுள்ளது.
நிர்வாகத்தில் உள்ள ஏனையவர்களுக்கு தெரிவிக்காமல் பொருத்தமற்ற நேரத்தில் Hard Disk அகற்ற முற்பட்டமை உள்நோக்கம் கொண்டதா? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருடச்சென்றவர்கள் CCTVயின் Hard Disk ஐ அகற்ற முற்பட்டபோது பாம்பு தீண்டியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிவந்தமை தெரிந்ததே.