ரியூனியன் தீவுக்குச் சென்று குடியேற முற்பட்ட இலங்கையர்கள் 14 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்!

editor 2

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவுக்குச் சென்று சட்ட விரோதமாக குடியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் 14 பேரை பிரான்ஸின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். 

அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக  படகுகளில் பயணித்தபோதே தடுத்து நிறுத்தப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article