வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புயலின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் பட்சத்தில், மாலைதீவு நாடு பரிந்துரைத்த ‘மிதிலி’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக உருவான புயல்களுக்கு இந்தியா பரிந்துரைத்த தேஜஸ் ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப் பிடத்தக்கது.