Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எனது கைது எடுத்துக்காட்டுகின்றது- என்று நேற்று பொலிஸாரால் கைது செய்யப் பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கஜேந்திர குமார் பொன்னம்பலம் எம். பி. தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சு நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் அல்வாய் வடமத்தி, அல்வாய் மாவிலங்கடி வீயியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (07) முற்பகல் மீட்க்ப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வேதார்வளவு, வியாபாரிமூலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சேதுராமலிங்கம் (வயது- 81) என்பவராவார்.
கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதங்கேணியில் பொலிஸாரின் பணிக்கு இடையூறு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு…
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் மிகவும் வன்மையாகக் கண்டித்தார். சாணக்கியன் எம்.பி. சபையில் இன்று உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:- "நாடாளுமன்ற உறுப்பினர்…
"நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார். இதனைப் பொலிஸார் என்னிடம் தெரிவித்துள்ளனர்." – இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்குக் கஜேந்திரகுமார் எம்.பிக்கு உரிய…
"நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதியன்று அப்போது சபாநாயகராகப் பதவி வகித்த சமல் ராஜபக்ச தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க வரும் எம்.பியைக்…
"நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய புலனாய்வாளர்களும் சட்டம் – ஒழுங்கைக் காக்க வேண்டிய பொலிஸாரும் தங்கள் அதிகார வரம்பை மீறிச் செயற்படுவது கண்டனத்துக்குரியது." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நாடாளுமன்ற…
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் சாவடைந்துள்ளனர்.
வடக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாட்டில் சகல இன மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சுதந்திரமாக நடமாட முடியும். அந்த நிலைமையை ஜனாதிபதி…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை (வயது 79) இன்று (06) காலமானார். அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தமிழ் அரசுக் கட்சியின் நெடுங்கால…
மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவ முகாம் அமைந்திருந்த 8.6 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.
தமிழகத்தின் முத்துப்பேட்டை கடலோரப் பகுதியில் 300 கிலோகிராம் கஞ்சாவை இலங்கைக்குக் கடத்த முயன்ற மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து கியூ…
தனது 11 வயது மகளைக் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 6 இலட்சம் ரூபா நட்டஈடும், 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account